எள்ளுருண்டை செய்வது எப்படி..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Oplus_131072

எள்ளுருண்டை செய்வது எப்படி……

தேவையான பொருட்கள்:

வெள்ளை எள் – 4 கப்

நாட்டுச் சர்க்கரை – 3 கப்

ஏலப்பொடி – 1 தேக்கரண்டி

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி, எண்ணெய் விடாமல் அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வறுத்த எள்ளை உரலில் இட்டு உலக்கையினால் இடித்து பிறகு அதனுடன் சர்க்கரைச் சேர்த்து இடித்து, கடைசியாக ஏலப்பொடி சேர்த்து சிறிது நேரம் இடிக்கவும்.

உரல் வசதி இல்லாதவர்கள் அம்மியில் அல்லது ஆட்டுக் கல்லில் போட்டு அரைத்துக் கொள்ளலாம். மிக்ஸியில் போட்டால் மிகவும் நைசாக அரைப்பட்டு சுவை குறைந்துவிடும். இடித்து வைத்துள்ள மாவினை சிறு சிறு உருண்டைகளாக நன்கு அழுத்தி உருட்டிக் கொள்ளவும்.

Read Previous

உடன்பிறப்பு..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான பதிவு..!!

Read Next

ஐஸ் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்து பற்றி தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular