ஒரு ஆண் தான் உடன் பழகும் பெண்னிடம் அவளை பிடித்து இருந்தால் அதை எப்படி வெளிப்படுத்துவான்?..

1 . வித்தியாசமான பெயர் வைத்து அழைப்பார் . நம் மை வேறு யாரும் அந்த பெயரால் அழைத்திருக்க மாட்டார்கள் . பல சமயங்களில் ‘madam ‘ என்பார்கள், இது தமிழ் பசங்களுக்கு இருக்கும் common trait 😂.

2 . தேனில் பால் கலந்த குரலில் பேசுவார்கள் . பிறரிடம் சாதாரணமாக பேசுவதை பார்த்தால் பயமாக இருக்கும் . நம்மிடம் பேசும்போது 300x மென்மையாக பேசுவாங்க.

3 . ஒரு பழச்சாறு கடையில் போய் பழச்சாறு வாங்கி முழுமையாக குடிக்க முடியல னு சொன்னா யோசிக்காமல் நம்ம எச்சில் ஜீஸை வாங்கி வாயில் ஊற்றி கொள்வார்கள் .

4 . எங்க போனாலும் நம்மல தான் கண் பார்க்கும் . திடீரென பார்த்தால் அப்படியே தடுமாறி சமாளித்து நம் அருகில் இருக்கும் தண்ணீ கேனை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து சமாளிப்பது/ நாம் பார்த்ததும் புருவம் உயர்த்தி ‘என்ன’ என்பதை போல் கேட்பாங்க.

5 . மாவட்ட வரைபடம் முழுவதும் மண்டையில் இருக்க , நமக்கு அழைத்து நமக்கு தெரிந்த நாலு தெருவில் ” அங்க போக வழி சொல்லு” என்று கேட்பாங்க . பேச காரணம் தேவை , அதுக்கு மொக்கையாக எதையாவது கண்டுபிடித்து பேசுவாங்க.

6 . நாம் ஆராய்ந்து பார்த்தால்/ அளவிடும் பார்வை பார்த்தால் வெட்கப்பட்டு ஓடி விடுவார்கள் . இல்லையெனில் ” எதுக்கு அப்படி பாக்குற” என்று கோபமாக கேட்க முயற்சிப்பது.

7 . நமது ஆண் நண்பர்கள் , உடன் பணியாற்றும் திருமணமாகாத ஆண்கள் , அவர்களின் potential competitors . அவர்கள் நம்மிடம் நடந்து கொள்ளும் முறை, நமக்கு அவர்கள் மீதான அபிப்பிராயம் என்ன என்று அடிக்கடி கேட்பாங்க.

8 . பேருந்து நிலையம் ,கடை வீதிகளில் safari suit ,Coolers, துப்பாக்கி இல்லாத சிறப்பு பாதுகாப்புப்படை காவலர் போல் நடந்து கொள்வார்கள் . நம்மைச் சுற்றி 360° லாம் கண்காணிப்பு இருக்கும் .

9 . ஒரு ஆண் ஆழமாக ஒரு பெண்ணை நேசிக்க ஆரம்பித்தால் புகைபழக்கத்தை தானாக விட்டுவிடுவார் என்பது ஆராய்ச்சி முடிவு . உண்மையில் கண்டதும் கூட.

10 . 180° கேரக்டர் மாற்றம் . அனைவரிடமும் சீரியஸ் முகமாக இருப்பவர்கள் நம்மிடம் விளையாட்டுத் தனமாக நடந்து கொள்வது , பிறரிடம் விளையாட்டுத்தனமாக நடப்பவர்கள் நம்மிடம் பொறுப்பாக நடந்து கொள்வது . நம்மால் மட்டும் அவர்களின் Shy , awkward , restless நிலையை அடிக்கடி பார்க்க முடியும் .

11. நம்மை ஏதாவது சொல்லி சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார்கள், நாம் கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்கும் போது நம்மை பார்த்துக் கொண்டே இருப்பார்கள் , புன்னகையோடு.

12 . தன்னுடைய தனிப்பட்ட விசயங்களை நம்மிடம் சொல்வார்கள் . அப்பாவோடு சண்டை போட்டது , அம்மாவிடம் அடி வாங்கியது எல்லாம் . சில பிரச்சினைகளைச் சொல்லி ” என்ன பண்றது னு தெரியல” என்று நம் கருத்தை மறைமுகமாக கேட்பாங்க.

13 . தனக்காக ஆடை வாங்க போகும் போது நம்மை select பண்ண சொல்வார்கள் . Women love freedom in relationship , men love to be bounded . நீங்கள் அந்த டீக்கடைக்கு போகாதே என்றால் போக மாட்டார்கள். அவர்கள் வாழ்க்கையில் நம் அதிகாரத்தை உரிமையை விரும்பி ஏற்பார்கள். ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணிவிட்டு வந்து நம் அடி,திட்டை அவார்ட் போல் சிரிப்போடு வாங்கிக் கொள்வார்கள்.

14 . மறைமுகமாக பிடித்தத்தை தெரிவிப்பது. “உன்னை பார்க்கும் முன் ஒரு பொண்ணு என்னை பிடித்து என்கிட்ட சொல்லுச்சு . ஆனா எனக்கு பிடிக்கல . ஏனா .. எனக்கு …இந்த மாதிரி பொண்ணு தான் பிடிக்கும்” என்று நம் குணங்களை பட்டியல் இடுவார்கள். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரி சொல்லும் அடையாளம் அளவுக்கு அப்பட்டமாக தெரியும் . ( நாம் புரிஞ்சாலும் புரியாத மாதிரி ‘ அந்த மாதிரி பொண்ணு எங்க இருந்தாலும் உன் கூட நான் சேர்த்து வைக்கும் வர ஓய மாட்டேன் னு வசனம் பேசுவோம் 😂).

15 . நம்மோடு அதிக நேரம் செலவிட முயற்சி . கிளம்ப மனமில்லாமல் காலம் தாழ்த்தி கொண்டே இருப்பது . Always available ஆக இருப்பார்கள்.

16. நம்மை சந்திக்க தயராகி வரும்போது ,ஒரு கூடுதல் மெனக்கெடல். அது ஒரு நல்ல வாசனை திரவியம், திருத்தப்பட்ட தாடி , இஸ்திரி பண்ண சட்டை .. எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

17 . நமக்காக ஏதாவது பணம் செலவு செய்து அதை திருப்பிக் கொடுக்க நினைத்தால் வாங்க மாட்டார்கள் .

18 . விளையாட்டு தனமாக ஹேர் பேண்ட்,பின் ,பேனா என்று நம்முடைய பொருளை பிடிங்கிக் கொள்வது , நமக்கு பிடிக்காத எதையாவது சொல்லி வம்பு வளர்த்து சந்தோசப்படுவாங்க.

19 . மறைமுகமாக உரிமை எடுத்துக் கொண்டு கும்பலில் நம் அருகில் நிற்பது , நாம் சாப்பிடும் தட்டில்/ பாக்ஸில் இருந்து உணவை எடுத்துக் கொள்வது , திருநீறு வைத்து விடு என்று நிற்பது( சிறுபிள்ளைத்தனமான பிடிவாதங்கள்), யாரோ ஒருவர் கழுத்தில் கத்தியை வைத்து பூ வாங்க வைத்திருக்க ,அதை வேறு வழியில்லாமல் நம்மிடம் தருவது..

Read Previous

மனதில் வலிமையான எண்ணங்களை வளர்க்க உதவியாக இருக்கும்..!! படித்ததில் பிடித்த பதிவு..!!

Read Next

சுவையான புளி பச்சை மிளகாய் தொக்கு செய்வது எப்படி?.. முழு செய்முறை உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular