மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஒரே பெண்ணை காதலித்த விவகாரத்தில் இரு ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது.
சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த கெளரவ் பங்கஜ், கெளரவ் ரம்பாவ் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது ஏற்பட்ட மோதலில் பங்கஜ் கத்தியால் குத்தப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுதொடர்பாக கெளரவ் ரம்பாவை கைது செய்துள்ள போலீசார், சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




