கஞ்சனான கணவனும் புத்திசாலி மனைவியும்..!! சிறுகதை..!!

Oplus_131072

கஞ்சனான கணவனும் புத்திசாலி மனைவியும்…

ஒரு கணவன், தான் காலமெல்லாம் சம்பாதித்த பணத்தை, தம் குடும்பத்திற்கு கஞ்சதனமாக செலவு செய்து, மீதியை சேமித்து வைத்திருந்தார். மனைவி பிள்ளைகள் நல்ல ஆடை உணவு என எதையுமே அனுபவிக்கவில்லை. சில காலத்தில் கணவன் நோய்வாய்ப்பட்டார் அவர் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன் தன் மனைவியை அழைத்து ‘நான் இறந்துவிட்டாலும் என் பணத்தை என் கூடவே கொண்டு செல்ல விரும்புகிறேன். எனவே என் பணத்தை என்னுடன் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்துவிடு” என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டார். தன் கணவரின் கடைசி ஆசை என்பதால் அவர் மனைவியும் அப்படியே செய்வதாக உறுதிமொழி செய்துவிட்டார்.அம்மனிதர் இறந்த பின் எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. சவப்பெட்டியை மூடும்போது, அந்த நேர்மையான மனைவி, ‘கொஞ்சம் பொறுங்கள்” என்று கூறி சவப்பெட்டியினுள் ஒரு பெரிய கவரையும் வைத்து மூடச்செய்தாள். அடக்கமும் செய்தாச்சு.அவளுடைய கடினமான வாழ்வையும், அவள் கணவருடைய கருமித்தனத்தையும் அறிந்திருந்த அவள் தோழி ‘நீயும் முட்டாள்தனமாக அவர் சொன்னது போல் செய்துவிட்டாயா?” என்று கேட்டாள்.அதற்கு அந்த நேர்மையான மனைவி, ‘அவர் சவப்பெட்டியினுள் பணத்தை வைப்பதாக உறுதிமொழி கொடுத்துவிட்டு மாற்றவா முடியும்? அவர் சேமிப்புகள் மொத்தத்தையும் பணமாக்கி என் வங்கிக்கணக்கில் போட்டுவிட்டு, அந்த முழுத்தொகைக்குமான காசோலையை வைத்துவிட்டேன். அவர் போன இடத்தில் மாற்ற முடிந்தால் மாற்றி அதை அவர் செலவழித்துக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்றாள்.

Read Previous

ஐயங்கார் வீட்டு புளியோதரை அதே சுவையில் செய்வது எப்படி..??

Read Next

பதவி வரும் போது பணிவு வர வேண்டும்.. என்பதை உணர்த்திய அருமையான பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular