Oplus_131072
கடலுக்கு ஒரு விசித்திரமான #குணம் உண்டு ..
உயிருள்ள பொருட்களை மட்டுமே தனக்குள் வைத்துக் கொள்ளும்.
#உயிர் இல்லாத பொருட்களை கரையில் கொண்டு வந்து சேர்த்து விடும்..
சந்தோஷத்துக்கு உயிர் இருக்கிறது.
அதை வைத்துக் கொள்ளுங்கள்.
கவலைகளுக்கும் கஷ்டங்களுக்கும் உயிர் இல்லை கடலை போல கரையில் சேர்த்து விடுங்கள்..
கடல் போல் மனசு என்று சொல்வார்கள்…
கடலில் குப்பைகளை தூக்கி வீசி எறிகிறோம் கடல் அதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு..
எந்த குப்பைகளையும் தனக்குள் வைத்துக் கொள்வதில்லை..
கரையில் கொண்டு சேர்த்து விடுகிறது..
அதைப் போலத்தான் உங்களுடைய கடல் என்னும் மனதில் சில நேரங்களில் சில மனிதர்கள் குப்பைகளை கொட்டுவார்கள் அதை சேர்த்து வைக்காதீர்கள்…
உங்கள் மனதில் சேரும் குப்பைகளை அவ்வப்போது அப்புறப்படுத்தி விடுங்கள் கடலைப் போல உங்க மனதும் சுத்தமாக இருக்கும்….. சுகாதாரமாகவும் இருக்கும்…




