கணவன் மனைவிக்கு இடையே இந்த புரிதல் மட்டும் இருந்தால் போதும் வாழ்க்கை சொர்க்கம் தான்..!!

ஒரு வீட்டின் வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம் ஏற்படுகின்றது.

இதை கவனித்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர்…

அவ்விளைஞனை அணுகி தம்பி நான் கேட்கின்றேன் என்று தவறாக எண்ணிக் கொள்ளாதீர்கள் ஏன் மனைவியைக் கடிந்து கொள்கின்றீர்கள் என தெரிந்து கொள்ளலாமா எனக் கேட்டார்.

“ஒன்னுமில்லை மாமா வெளியே எங்கயாவது கூட்டிப் போகட்டாம் எனக்கே அசதியா இருக்கு இந்த பொம்புளைங்களே இப்படி தான் மாமா சும்மா கடுப்பேத்திகிட்டு.

முதியவர் சிறு புன்னகையோடு தம்பி முன்பெல்லாம் நான் எங்க போனாலும் என் மனைவியோட தான் போவேன்.

ஆனா இப்ப அவங்க இறந்து 2 – 3 வருஷமாச்சு.

எங்க ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு தான் நாங்க இரண்டு பேருமே ஆசிரியர்கள் எங்களோட 3 பிள்ளைங்களும் கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே நாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம்.

என் மனைவிக்குத் துர்திஷ்டவசமா சுகர் நோய் இருந்திச்சி தினமும் மருந்து சாப்பிடணும் அவங்க அவ்வளவு திடகாத்திரமா இல்லாததாலே நான் தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன்.

இப்ப அவங்க இல்லை நான் ரொம்ப தனிமையாக உணர்கிறேன்.

என் பகல்கள் ரொம்ப நீளமாயிடுச்சு, இரவுகள் ரொம்பவும் வெறுமையாச்சு.

அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு நினைவுபடுத்திகிட்டே இருக்கு.

அவங்க சாப்பிட்டு முடிக்காத அந்த மருந்துகள் கூட என்னைக் கவலைப்படுத்துது.

அவங்க handphone நம்பர் இருக்கு ஆனா நான் அழைச்சா இனி பேச மாட்டாங்க, whatsupp பண்ணா படிக்க மாட்டாங்க.

முன்னே என் படுக்கையிலே ஒரு பக்கம் நானும் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம் இப்போ நான்
அதே படுக்கையிலே தனியா படுத்திருக்கேன்.

சமையலறைக்குத் தனியா போறேன், சமையலுன்னு பேர்ல எதையோ பண்றேன், வாய்க்கு ருசியா சமைச்சித் தர அவங்க இல்லை, நானே துணி துவைக்கின்றேன் என விழியோரம் நீர் தேங்க சொல்லிக் கொண்டே அதான் தம்பி அவங்க இருக்கும் போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும், அதிகமாக போற்றணும்.

இன்னிக்குத் தினமும் என் மனைவியோட கல்லறைக்குப் போறேன்.

எனக்காக எல்லாத்தையும் தயார் பண்ண நீ முன்னுக்கே போயிட்டியாம்மா இதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன் என்று சொல்லி முடித்து

சரி தம்பி நான் வரேன் என்று புறப்பட்ட பெரியவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் அந்த இளம் கணவன்.

ஆம் நம் மனைவி தானே அவளோட எப்படி நடந்தாலும் பரவாவில்லை என கணவனும், நம் கணவன் தானே அவனோட எப்படி பேசினாலும் பரவாவில்லை என மனைவியும் எண்ணக் கூடாது.

புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடமே,

hi sir how r u, Nice to meet u என்கிறோம்.

இடையில் இருமுகின்றோம்,
தும்முகிறோம் I’m sorry sir என்கிறோம்.

பேச்சுக்கிடையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது உடனே excuse me sir சொல்றோம்.

அந்த நபரைச் சந்தித்தே 10-20 நிமிடம் தான் ஆகியிருக்கும்.

அதன் பின் அவரைச் சந்திப்போமா என்றே தெரியாது ஆனாலும் எவ்வளவு மரியாதை தருகிறோம்.

ஆனால் வாழ்நாள் முழுதும் நம்மோடு வாழ்கிற மனைவியை கணவன் மதிக்கிறானா…

இல்லை மனைவிதான் கணவனை மதிக்கிறாளா..

பதில் 100 க்கு 90 சதவீதம் இல்லை தான்.

பொண்டாட்டி சமைத்து போடுறதை கணவன் பிரமாதமுன்னு பாராட்டுறதுமில்லை,

அசதியாக வேலை முடிந்து வீடு திரும்பும் கணவன் கிட்ட ஏங்க ரொம்ப வேலையா காலையிலேர்ந்து நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேங்கனு மனைவியும் சொல்றதில்லை.

இதெல்லாம் சொல்லணும்.

அப்படி ஒருத்தர் உணர்வை இன்னொருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பிச்சா வாழ்க்கை இனிக்கும்.

Read Previous

கணவன் மனைவி உறவில் வரும் சண்டைக்கு தீர்வு என்ன..? படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

குடும்பம் என்பது இறைவன் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular