Oplus_16908288
கணவன் மனைவி இடையே சண்டை வேண்டாம்…
கணவர்கள் கொஞ்சம் மனைவியைக் கவனியுங்கள்….
அதே போல மனைவியையும் கணவர்கள் கவனியுங்கள்
அப்போது தான் வாழ்க்கை சிறக்கும்…..
மண வாழ்க்கைக்கு தேவை உண்மையான பாசத்துடன் கடைசி மட்டும் கூடவே வரும் உறவு.
ஒவ்வொருவருடைய குடும்ப வாழ்வில் விட்டுக் கொடுத்தல் முதல் முக்கியம்.
ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
“ஆசை 60 நாள் மோகம் 30 நாள்” இது தான் இன்றையவர்களின் வாழ்க்கை
வாழ்க்கை இதுவல்ல அன்பு எப்பவும் இருக்க வேண்டும் நீ மணம் முடிக்கும் முன் எப்படி வேண்டுமானாலும் இரு மணம் முடித்த பின் ஒருவொருக்கு ஒருவர் உயிராக உறவாக இரு.
உங்கள் துனையுடன் அன்பு பகிரப்படாத நேரத்தில் வேறு ஒரு துணையை, அன்பைத் தேடுவது காமத்திற்கு அல்ல அது பாசத்திற்கு…
இன்றைய பல கணவன்கள் நினைப்பது வயிற்றில் பிள்ளையைக் கொடுத்தோம், உண்பதற்கு உணவு கொடுக்கிறோம், உடுத்த உடை கொடுக்கிறோம் இதை விட என்ன வேண்டும் என்று…
மனைவி எதிர்பார்ப்பது கணவன் தன் மீதான பாசத்தை, அன்பை, அவள் வலிகளை, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள அவளுக்கு அவன் உயிருக்கு மேலாக உண்மையான பாசத்தை தான் எதிர் பார்க்கிறாள்.
இதில் குறை யார் மீது மனைவி மீதா இல்லை கணவன் மீதா…??
சில கணவன்மார் இரண்டு, மூன்று குழந்தைகள் பிறந்த பின் மனைவியுடன் நெறுங்குவதை தவிர்த்து மாற்றான் தோட்டத்து மல்லிகையை ரசிக்கிறார்கள்.
ரோஜா இதழை ஒவ்வொன்றாகப் பிரித்து ரசித்துப் பார் அது போல தான் உன் மனைவி அவள் அழகிலும், பாசத்திலும் குறைந்தவள் அல்ல அவளை சரியாக கணவன்கள் புரிந்துக் கொள்ளவில்லை.
அது போல தான் மனைவிமாரும் கணவன்களை அடக்கி ஆள நினைக்காதீர்கள், தொட்டதுக்கெல்லாம் சந்தேகம் கொள்ளாதீர்கள்.
ஒரு மனதோடு வாழ்ந்தாலும், மனதைப் பறி கொடுத்து வாழ்ந்தாலும், மறுமணம் முடித்து வாழ்ந்தாலும் கடந்த காலங்களைப் பற்றி நினைக்காதீர்கள், பேசாதீர்கள் நாளை அதை மட்டும் நினையுங்கள், பேசுங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
ரசித்து உணர்வது தான் கல்யாண வாழ்க்கை…




