நாம் தினமும் உண்ணும் உணவுகளில் எப்போதும் பயன்படுத்தும் ஒரு காய்கறி என்றால், அது கத்தரிக்காய்யாக தான் இருக்கும். சாம்பார் முதல், காரக்குழம்பு வரை , ரசம், மோர் மற்றும் கத்தரிக்காய் சாம்பார், கத்தரிக்காய் குழம்பு, கத்தரிக்காய் பொரியல், அவியல் என அத்தனை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிலர் கத்தரிக்காய் கொச்சி, சட்னி போன்றவற்றையும் தயார் செய்து சாப்பிடுவார்கள். அனால் , இந்த கத்தரிக்காய் சாப்பிடுவதால் நமது உடலில் என்னென்ன ஆகும் என உங்களுக்கு தெரியுமா. அதை இந்த பதிவில் காண்போம்.
கத்தரிக்காய் சாப்பிடுவதால் அதில் உள்ள மக்னீசு தாதுப்பொருள் மூலமாக உடலின் வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றம் தொடர்பான அனைத்து பிரச்னையும் சரியாகும். ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கத்தரிக்காயில் இயற்கையான ஆக்சிஜனேற்றம் என்பது உள்ளது.
இதனால் சூரியனில் இருந்து வெளிப்படும் புறஊதா கதிர்களின் அழுத்தத்தில் இருந்து நமது சருமத்தையும் பாதுகாக்கும். மேலும், எலும்புகளை உறுதியாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். முடிந்த அளவு நமது ஊர் மண்ணில் விளையும் நாட்டு கத்தரிகளை சாப்பிடுவது, நமது உடல் நலத்திற்கு கூடுதல் நன்மை சேர்க்கும்.




