கடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வெற்றியை எதிர்த்து, தவெக வேட்பாளர் வி.பி.மதியழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால், தங்களது கட்சியில் இணைந்த நபருக்கு எதிரான இந்த வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என மதியழகன் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை திரும்பப் பெறுவதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளின்படி வழக்கை வாபஸ் பெறுவதற்கான முறையான மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.




