இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது..!!

 

 

இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் புதிய மைல்கல்லாக, ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் உருவாக்கிய ‘விக்ரம்-1’ ராக்கெட், ‘ஆகமன்’ (Aagaman) என்ற பெயரில் இன்று (சனிக்கிழமை) பகல் 11.30 மணிக்கு ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.

 

இந்த ராக்கெட், பூமியிலிருந்து சுமார் 450 கிலோமீட்டர் உயரமுள்ள சுற்றுப்பாதையில் பல்வேறு ஆய்வு கருவிகளை நிலைநிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

விக்ரம்-1 ஏவுதல், இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவுதல் என்ற முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது. இந்த முயற்சி, இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையின் வளர்ச்சியில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

Read Previous

கரூர் தேர்தல் வழக்கை வாபஸ் பெற தவெக வேட்பாளர் முடிவு: உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

Read Next

ஈரான் மீது அமெரிக்கா 7வது நாள் தாக்குதல்: 3 பேர் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular