கர்நாடகா விவகாரங்களில் தமிழகம் தலையிடக் கூடாது என அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பேசிய அவர், ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தலையிடக்கூடாது என்றார்.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு விவகாரங்களில் தன்னால் தலையிட முடியாது என்றும், அதேபோல் கர்நாடகாவின் நிர்வாகத்தை கவனித்துக்கொள்ள தங்களுக்கு தெரியும் என்றும் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
அவர்கள் தங்கள் பணியை செய்யட்டும் என்றும், நாங்கள் எங்கள் பணியை செய்கிறோம் என்றும் அவர் கூறினார்.




