காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா..!! இதை நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டும்..!!

நம்மில் பல பேருக்கு காலை எழுந்தவுடன் டீ அல்லது காப்பி குடித்தால் தான் அந்த நாளே தொடங்கும். நமது பண்பாட்டில் அது எப்போதும் இருந்ததில்லை. ஆனால் ஆங்கிலேயரின் ஆட்சிக்குப் பின் நம்மிடையே ஏற்பட்ட மாற்றத்தில் ஒன்றுதான் காலை எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிப்பது.

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிப்பது அமிலம் மற்றும் காரத்தன்மையில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். இதன் காரணமாக நமது உடம்பில் அசிடிட்டி அதிகமாக உருவாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதேபோல வளர்ச்சிதை மாற்றம் செரிமானம் பிரச்சனைகள் ஆகியவை ஏற்படும். இதனால் காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கத்தை நிப்பாட்டிக் கொள்வது நமது உடல் நலத்திற்கு மிகவும் நல்லதாக அமையும்.

Read Previous

அடையை சுரக்காயில் செய்வதா..!! அசத்தலான மற்றும் சத்தான செய்முறை இதோ..!!

Read Next

வெங்காய வத்தலை இப்படி செய்து பாருங்கள்..!! அனைவருக்கும் பிடிக்கும் அசத்தலான செய்முறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular