நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியமாக காணப்படுகிறது. அப்படி சுரக்காயில் அதிகமாக நீர்ச்சத்து இருக்கிறது என்று நமக்கு நன்றாகவே தெரியும். அந்த சுரக்காயை வைத்து அடை எப்படி செய்வது என்று தெளிவாக இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு – 50 கிராம்
இட்லி அரிசி – 200 கிராம்
கடலைப்பருப்பு – 50 கிராம்
சுரைக்காய் – 100 கிராம்
பாசிப்பருப்பு – 50 கிராம்
மிளகாய் வத்தல் – 4
சின்ன வெங்காயம் – 50 கிராம்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
மஞ்சள் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் – தேவைக்கு ஏற்ப
கொத்தமல்லி, கருவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
இதில் குறிப்பிட்டுள்ள பருப்பு வகைகளையும் இட்லி அரிசியையும் நன்கு கழுவி தனித்தனியாக மூன்று மணி நேரம் வரை ஊற வைக்கவும். சுரக்காய் கருவேப்பிலை கொத்தமல்லி ஆகியவற்றை சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை குட்டி குட்டியாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
ஊற வைத்திருக்கும் பருப்பு வகைகள் இட்லி அரிசியை மிளகாய் வத்தல் மற்றும் உப்பு சேர்த்து ரவை போன்று அரைத்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கலக்கி வைக்கவும்.
அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து லேசாக எண்ணெய் தடவி சூடான பிறகு தோசை போன்று இந்த மாவை ஊற்றி வெந்த பின் பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான சுரக்காய் அடை தயார்.




