தமிழ் நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையினை உயர்த்திடவும், தொழில்முனைவோர்ககளை உருவாக்கிவிடவும் புதிய கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் நாட்டு கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ 25 லட்சம் வரையும், செம்மறி ஆடு / வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10 வட்சம் முதல் ரூ.50 வட்சம் வரை கடனும் வழங்கப்படுகிறது. பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க ரூ.15 வட்சம் முதல் ரூ.30 வட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான விரிவான திட்ட அறிக்கையினை விண்ணப்பதாரர்கள் http://www.tnlda.tn.gov.in/ என்கிற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள மென்பொருள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள், அருகில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அலுவலர்கள் மற்றும் தமிழ் நாடு கால்நடை மேம்பாட்டு முகமை, சென்னை அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்.




