கால் விரல் மோதிரம் ( மெட்டி) பின்னால் உள்ள மருத்துவ நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
கால் விரல் மோதிரம் என்பது நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே பாரம்பரிய பாரம்பரியமாக பின்பற்றி வரும் ஒரு சடங்கு ஆகும். இந்நிலையில் இதன் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
இந்து மத திருமணங்களில் மணமகள் கால்விரல் மோதிரம் அணிவது ஒரு பாரம்பரிய நெறியாக விளங்குகிறது. இதற்குப் பின்னால் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய காரணங்களும் உள்ளன. கால்விரல்கள் பெண்ணின் கருப்பையுடன் நேரடியாக தொடர்புடையவை என்பதால் மோதிரம் அணிவது அக்குபிரசர் தாக்கத்தை ஏற்படுத்தி மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது. இது கருப்பையின் செயல்பாட்டை மேம்படுத்தி மகப்பேறு ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.




