கேரட் கீர்செய்வது எப்படி..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க இல்லத்தரசிகளே..!!

Oplus_131072

 

தேவை :

முந்திரிப் பருப்பு – 30. காய்ந்த திராட்சை 20, கேரட் -100 கிராம், பா ல் – 3ஃ4 லிட்டர், சர்க்கரை – 300 கிராம். நெய் 25 கிராம். பால் பவுடர் – 100 கிராம், தண்ணீர் – தேவைக்கேற்ப ஏலக்காய் தூள் – சிறிதளவு

செய்முறை :

கேரட் டை துருவி வைத்து கொள்ளவும்.சிறிது சூடான நீரில் பால் பவுடரைப் போட்டு கட்டியாக இல்லாமல் நீர்மம் போல் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் 3ஃ4 லிட்டர் பாலை உற்றி, அதில் ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை போட வேண்டும். கொதிக்கும் போது துருவிய கேரட் போட வேண்டும். கேரட் நன்றாக வெந்தப் பிறகு, ஏற்கனவே தண்ணீரில் கலந்துவைத்த பால்பவுடரை அத்துடன் சேர்த்து கலக்க வேண்டும். பாயாசம் பதத்திற்கு வந்தவுடன் தேவைக்கேற்ப சர்க்கரை போட்டு நன்றாக கலக்கவும். உங்களுக்கு பாயாசம் போல் வேண்டும் என்றால் நீர்மமாக இருக்கும்போதே இறக்கி வைக்கலாம் அல்லது க்ரீமி  பதத்தில் வேண்டும் என்றால் சிறிது சுண்டியவுடன் இறக்கலாம். பிறகு நெய்யில் முந்திரிகளையும் திராட்சைகளையும் வறுத்து அதன் மேலே அலங்கரிக்கவும்.

Read Previous

சர்க்கரை நோய் உள்ளவர்கள்- அவசியம் சாப்பிட வேண்டியது..!!

Read Next

போதைப் பொருள் வழக்கில் கைதாகும் நடிகர் ஸ்ரீகாந்த்?.. திரையுலகம் அதிர்ச்சி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular