கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து போதை காளான் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், வெளிமாநில இளைஞர்கள் இதனால் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக கொடைக்கானலில் சிறப்பு போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற நபரிடம் போலீசார் விசாரித்ததில், அவரிடம் போதை காளான் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அதனை பறிமுதல் செய்த போலீசார், ஜெகநாதன் (45) என்பவரை கைது செய்தனர்.




