திரைப்பட ஷூட்டிங்கில் பங்கேற்றிருந்த நடிகர் ரோபோ சங்கர் திடீரென மயங்கியதால் நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்ச்சத்து குறைவு மற்றும் குறைந்த ரத்த அழுத்த பிரச்னை இருந்ததாக கூறப்பட்டது. காலையில் சாதரண பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர் மாலையில் ஐசியு-வுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




