தமிழகத்தில் அரிய வகை கனிமச் சுரங்கம்: 5 நிறுவனங்களுக்கு விரைவில் அனுமதி?

 

 

தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் அரிய வகை கனிமச் சுரங்கம் மற்றும் காந்த உற்பத்தி தொடர்பான திட்டங்களை செயல்படுத்த 20 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதில் 5 நிறுவனங்களுக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் IREL நிறுவனம், கிள்ளியூர் வட்டாரத்தில் கூடுதல் கனிமச் சுரங்கம் அமைக்க அனுமதி கோரியுள்ளது.

 

கீழ்மிடாலம், மிடாலம், இனயம்புத்தன்துறை, ஏழுதேசம் மற்றும் கொல்லங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் சுரங்கப் பணிகளை விரிவுபடுத்த அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தத் திட்டங்கள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Read Previous

மனைவியின் அந்தரங்க வீடியோக்களை இணையத்தில் பதிவிட்ட கணவர் கைது!

Read Next

சட்டப்பேரவையில் பரபரப்பு: “பள்ளி அனுமதிக்கு பணம் வசூலித்தனர்” – அமைச்சர் குற்றச்சாட்டு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular