சபரிமலை கலப்பட நெய் விவகாரம்.. முதற்கட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்..!!

 

 

சபரிமலைக்கு 1.50 லட்சம் லிட்டருக்கும் அதிகமான கலப்பட நெய் விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், தேவசம் கண்காணிப்புப் பிரிவு தாக்கல் செய்துள்ள முதற்கட்ட அறிக்கை பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

 

அந்த அறிக்கையின்படி, இந்த நெய் விநியோக ஒப்பந்தத்தில் ‘மில்மா’ மற்றும் தேவசம் வாரியத்தின் சில அதிகாரிகளின் திட்டமிட்ட செயல்பாடு இருந்திருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. மேலும், தேவசம் வாரியத்தின் முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் இடைத்தரகராக செயல்பட்டு, தனது செல்வாக்கை பயன்படுத்தி இந்த ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதுமட்டுமல்லாமல், விநியோகிக்கப்பட்ட நெய் உரிய தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் சபரிமலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் முதற்கட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, உண்மை நிலையை முழுமையாகக் கண்டறிய விரிவான விசாரணை நடத்த கேரள அமைச்சர் கே. முரளீதரன் உத்தரவிட்டுள்ளார். விசாரணை முடிவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read Previous

குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை..!!

Read Next

தூய்மைப் பணியாளர்களின் உணவு விவகாரம்.. அரசை விமர்சித்த நயினார் நாகேந்திரன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular