செங்கல்பட்டு மாவட்டம் சின்ன வெண்மணி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மூன்றரை வயது மகள் தீபிகா. கடந்த 11-ம் தேதி வீட்டில் அடுப்பில் இருந்த உலை பாத்திரத்தை தீபிகா இழுத்ததில், அவர் மீது பாத்திரம் விழுந்துள்ளது. இதனால் கதறிய தீபிகாவை, பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி தீபிகா நேற்று (செப்.19) உயிரிழந்துள்ளார். இதையடுத்து, செய்யூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




