சிந்து நீரை இந்தியா எப்படி நிப்பாட்டும்..!! கேள்விகளுக்கு பதில் இதோ..!!

காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. கடந்த 60 வருட காலமாக எத்தனை பிரச்சனைகள் பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் ஏற்பட்டாலும் இதுவரை செய்யாத ஒன்றை இந்த தடவை இந்தியா செய்தது. அதுதான் சிந்துநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது.

இந்த ஒப்பந்தத்தை நிறுத்திய பின் பாகிஸ்தான் இதை ஒரு போரின் முழக்கமாகவே கருதுகிறோம் என்று கூறியது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் என்னதான் இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி இருந்தாலும் இந்த தண்ணீரை உடனே தடுத்து நிறுத்த முடியுமா என்று கேட்டால் நிச்சயமாக கிடையாது. அதேபோல இந்த தண்ணீர் எங்கு போகும் என்றும் நம்மிடம் ஒரு கேள்வி இருக்கிறது.

இந்தியா இந்த தண்ணீரை இத்தனை காலமாக நிறுத்தாமல் இருந்ததற்கு காரணம், இதை நம்பியே பல மக்கள் பாகிஸ்தானில் இருக்கின்றனர். அங்கு இருக்கும் விவசாயத்திற்கு முக்கியத்துவமாக கருதப்படும் இந்த தண்ணீரை நிப்பாட்டி விட்டால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் என்று இத்தனை காலமாக இந்தியா இதை செய்யாமல் இருந்தது.

இப்போது இந்தியாவில் இருக்கும் சிறு சிறு அணைகளான பாக்லிஹார், கிஷங்கங்கா அணைகளால் இந்த தண்ணீரை நிறுத்தி விட முடியாது. சிறிது காலம் வேண்டுமானால் இந்த தண்ணீரை இந்த அணைகளை கொண்டு நிறுத்தி வைக்கலாம். இதனால் இந்தியா ஒரு பெரும் கட்டமைப்பை கட்டவிருக்கிறது.

அப்படி மட்டும் நடந்து விட்டால் தண்ணீர் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டுமா என்று இந்தியா தான் முடிவு எடுக்கும் நிலையில் இருக்கும். பாகிஸ்தான் மக்களுக்கு வறட்சியையும் வெள்ளத்தையும் கொடுக்கும் சக்தி இந்தியாவிற்கு வந்துவிடும். இது அந்த நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

Read Previous

பாஜக இளைஞரணி துணைத் தலைவர் வெட்டிக்கொலை..!! புதுச்சேரியில் பரபரப்பு..!!

Read Next

பூனைக்கடியால் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை..!! போலீசார் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular