பாஜக இளைஞரணி துணைத் தலைவர் வெட்டிக்கொலை..!! புதுச்சேரியில் பரபரப்பு..!!

புதுச்சேரி மாநிலத்தின் பாஜக இளைஞர் அணி துணை தலைவராக இருப்பவர்தான் உமா சங்கர். இவர் காமராஜ் நகரில் வசித்து வருகிறார். இவர் சாமி பிள்ளை தோட்டம் பகுதியில் தனியார் ஹோட்டல் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியில் இருந்த பத்து பேர் கொண்ட கும்பல் அவரை தடுத்து நிறுத்தி உள்ளது. அந்த பத்து பேர் இளைஞர் அணி துணைத் தலைவரை கடுமையாக தாக்கியுள்ளது. பல வெட்டு காயங்களின் காரணமாக அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் உமா சங்கர்.

இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என்று போலீசார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர். மேலும் இந்த கொலை சம்பவத்தை பற்றி தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read Previous

தண்ணீர் பாட்டிலில் டாய்லட்டை விட 40,000 மடங்கு அதிக பாக்டீரியா..!! நாம் செய்யும் தவறினால் ஏற்படும் பாதிப்பு..!!

Read Next

சிந்து நீரை இந்தியா எப்படி நிப்பாட்டும்..!! கேள்விகளுக்கு பதில் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular