சிறுநீரக செயலிழப்பு இறுதி நிலையை அடையும்போது, மூச்சுத்திணறல், உடல் முழுவதும் அதிகப்படியான வீக்கம் மற்றும் சிறுநீர் வெளியேறுவது மிகவும் குறைவது அல்லது முற்றிலும் நின்றுவிடுவது போன்ற தீவிர அறிகுறிகள் தோன்றலாம்.
மேலும், இரத்தத்தில் நச்சுக் கழிவுகள் அதிகரிப்பதால் தொடர்ந்து வாந்தி, மனக்குழப்பம், அதிக சோர்வு மற்றும் தோலில் கடுமையான அரிப்பு போன்ற பிரச்சினைகளும் ஏற்படக்கூடும். இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
சிறுநீரக நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய, அவ்வப்போது உடல்நலப் பரிசோதனை செய்து கொள்வதும், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் மிகவும் முக்கியம்.




