வடமேற்கு சீனாவின் கன்சு மாகாணத்தில், கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மலைப்பகுதிகளில் கடும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த கனமழை மற்றும் வௌ்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்த நிலையில் 33 பேர் மாயமாகி உள்ளனர். குவாங்டாங் மாகாணத்திலும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 7 பேர் உயிரிழந்தனர். 4000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.




