சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!! கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க..!!
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகத்தில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது. அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
சீர் + அகம் உடலின் உட்புறத்தை சீராக வைக்க உதவுவதால் இதற்கு சீரகம் என பெயர் வந்தது. கடுமையான வயிறு வலி மற்றும் வயிறு உப்பசம் இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் சீரகத்தை உப்பு சேர்த்து மென்று சாப்பிடலாம். அதுமட்டுமின்றி அஜீரண கோளாறுகள், செரிமான பிரச்சனை இருப்பவர்கள் சீரகத்தை சாப்பிட்டு ஒரு டம்ளர் சுடு தண்ணீர் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலம் சார்ந்த பிரச்சினைகள் சரியாகும். எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து விக்கல் எடுக்கும் பிரச்சனை இருப்பவர்கள் சீரகப் பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் விக்கல் நிற்கும். சீரகப் பொடியோடு எலுமிச்சை சாறு சேர்த்து குலைத்து சாப்பிட்டால் பித்தம் சார்ந்த பிரச்சினைகள் தீரும்.




