பீட்ரூட் ஆல்வா இப்படி செஞ்சா யாருதான் வேண்டாம் என்று சொல்லுவார்கள்..!! அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்முறை..!!

உடல் எடையை குறைக்க நினைக்கும் பல பேர் பீட்ரூட் சாப்பிடுவது வழக்கம்.  ஏனெனில் அதில் கலோரிகள் மிகவும் குறைவு. இப்போது சுவையான பீட்ரூட் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

நெய் – 7 தேக்கரண்டி

ஏலக்காய் – 4 ( பொடியாக்கியது )

பீட்ரூட் – 1/4 கிலோ ( துருவியது )

பால் – 1 கப்

முத்திரிப்பருப்பு – 10

உலர் திராட்சை – 10

சர்க்கரை – 1/4 கிலோ

செய்முறை :

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து 3 தேக்கரண்டி நெய் ஊற்றி மிதமான தீயில் 10 முந்திரிகள் மற்றும் உளர் திராட்சைகளை சேர்த்து நன்கு வறுத்த பின் தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.

இப்போது, அதே வாணலியில் துருவிய பீட்ரூட்டை சேர்த்து பச்சை வாசனை நீங்க வதக்க வேண்டும். பின்பு, 1 கப் பால் மற்றும் 1/4 கிலோ சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

பால் அளவு குறைந்து கெட்டியான பதம் வந்தவுடன் மீதம் இருக்கும் நெய் சேர்த்துக் கொள்ளவும். இறுதியில், ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரிப்பருப்பு, திராட்சை சேர்த்து இறக்கி விடவும். அனைவருக்கும் பிடித்த சுவையான பீட்ரூட் அல்வா தயார்.

Read Previous

சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!! கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

கலவை சாதம் கலக்கலாக செய்ய கண்டிப்பா இந்த டிப்ஸை தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular