ஆண்களின் சமையலறை..
வேலை செய்ற இடத்துல கூட அவ்வளவு வேலை இருக்காது. ஆனால் ரூமுக்கு வந்துட்டா அவ்வளவு வேலை இருக்கும் சமைக்கணும் பாத்திரங்கள் கழுவ வேண்டும் துணி துவைக்கணும் எத்தனையோ வேலை இருக்கு…
அதுவும் இந்த தனியா சமைச்சு சாப்பிடறோமே அப்பா பெரும் கஷ்டம்
இன்னைக்கு என்ன குழம்பு வைக்க நாளைக்கு என்ன குழம்பு என்று தினமும் யோசிச்சுக்கிட்டே இருக்கணும்..
அந்த வகையில் பெண்கள் எல்லாம் சொல்லக்கூடாது தினமும் ஒவ்வொரு குழம்பா வச்சு நமக்கு கொடுப்பார்கள்.
கம்பெனி மெஸ்ஸுல சாப்பிடறவங்களுக்கு பிரச்சனை இல்ல அவங்களுக்கு தினமும் ஒரு மெனு இருக்கும் ஒரு நாளைக்கு சாம்பார் ஒரு நாளைக்கு பருப்பு குழம்பு ஒரு நாளைக்கு சிக்கன் அப்படின்னு ஒரு மென் இருக்கும் அவங்களுக்கு பிரச்சனையே இல்லை…. ஆனால் ஒன்று ருசி இருக்காது…
கம்பெனி மெஸ் இல்லாம தனியா சமைச்சு சாப்பிட்டா அவர்கள் பாடு ரொம்ப கஷ்டம் தான்… அதுவும் ஒரு ரூம்ல அஞ்சு பேரு நாலு பேரு சேர்ந்து சமைச்சு சாப்பிட்டா பெறும் கஷ்டம்.. தான்
ஒரு நாளைக்கு ஒரு ஆள் சமைக்க வேண்டும் அந்த சமையல் பண்ற ஆளு ஒரு நாளைக்கு ஓவர் டைம் பார்த்தா அதற்கு அடுத்தவர் சமைப்பார்…
தினமும் ஓவர் டைம் பார்த்து ரூமுக்கு லேட்டா வந்தால் ஒரு மாசம் பார்ப்பார்கள் அடுத்த மாதம் நீ தனியாக சமைத்துக் கொள் எங்களுக்கு சரி வராது என்று அந்த ஆளை கழட்டி விடுவார்கள்…
நல்ல நண்பர்கள் கூட ஒரே ரூம்ல இருந்து சமைச்சு சாப்பிடும் போது சில பிரச்சனைகளை சந்தித்து கொண்டு தான் இருக்கிறார்கள்….
இந்த வாரம் நீ கிச்சனை கழுவ வேண்டும் அடுப்பை துடைக்க வேண்டும் பாத்ரூம் கழுவ வேண்டும் என்று சொல்வார்கள்…..
நம்மளுடைய முறை வரும்போது நம்ம சொல்லாம கிளீன் பண்ணுவது உத்தமம்…
நாளைக்கு வெள்ளிக்கிழமை அடுப்பை தான் சுத்தம் பண்ண வேண்டும்😃😃😃😃
வெளிநாட்டு வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்கள் இதைல்லாம் சமாளித்தால் தான் பணம் என்ற ஒன்றை பெற முடியும்…




