ஐபிலில் ஆரம்பித்து, சூடு பிடித்து வரும் நிலையில் நேற்று இரவு 7:30 மணியளவில் பெங்களூரு அணிக்கும் டெல்லி அணிக்கும் பெங்களூரில் போட்டி நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற டெல்லி, முதலில் பௌலிங் செய்வதாக முடிவெடுத்தது.
முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணியின் வீரர்கள் 163க்கு 7 விக்கெட்டுகளை விட்டு 20 ஓவரில் தனது பேட்டிங்கை முடித்தது. இதில், டிம் டேவிட் மற்றும் பில் சால்ட் என்னும் வீரர்கள் தலா 37 ரன்கள் எடுத்தனர். அனால் மத்த வீரர்கள் அவர்களுக்கு கய் கொடுக்கவில்லை. பௌலிங்கில் டெல்லி அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதில் குல்தீப் யாதவ் மற்றும் விப்ராஜ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து பெங்களூரு அணியை பந்தாடினர்.
அடுத்து பேட்டிங் ஆட இறங்கிய டெல்லி அணி இதிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில், ராகுல் 93 ரன்களும் ஸ்டப்ஸ் 38 ரங்களும் எடுத்து அசத்தினர். மற்ற அனைவரும் தனது சம பங்களிப்பை கொடுத்ததால் இலக்கை 17.5 ஓவரிலேயே பூர்த்தி செய்து பெங்களூரு அணியை டெல்லி அணி வென்றது.




