பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேசத்தில் 5 நாட்கள் நடைபெறும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை தொடங்கிவைத்தார். இதில் 2,400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பிரதமர் பேசும் போது, ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கும், மக்களின் சேமிப்புக்கும் வழிவகுக்கும் என்றும், சிப் முதல் கப்பல் வரை அனைத்தையும் இந்தியாவிலேயே தயாரிப்பதே நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.




