ரத்தன் டாடாவின் காதலை பிரித்தது எது தெரியுமா..
போர் காரணமாக இந்தியா செல்ல வேண்டாம் என கரோலினின் பெற்றோர் கூறியுள்ளனர், இது கரோலின் டாடா அவர்களுக்கு இடையில் பிரிவை ஏற்படுத்தியது, பின்னர் ஜோன்ஸ் என்பவரை கரோலின் திருமணம் செய்து கொண்டார், ஆனால் டாடாவோ கரோலின் நினைவில் இன்னும் திருமணம் செய்யாதது பற்றி தெரிய வரவே ஈமெயிலில் அவரை தொடர்பு கொண்டார் கரோலின், டாடா மற்றும் கரோலின் இருவருக்கும் இடையே மீண்டும் நட்பு மலர்ந்தது. டாடாவின் எண்பதாவது (80) பிறந்தநாளுக்கு கரோலின் இந்தியா வந்ததும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது, மேலும் ரத்தன் டாடாவின் காதல் பயணங்களில் தனது காதலியின் நினைவுக்காக தனது காலத்தை கடந்து வாழ்ந்து வந்துள்ளார், மேலும் டாடா குழுமத்தில் பெரும் பங்காற்றி பொருளாதாரத்தில் பெரும் வெற்றியை கண்டுள்ளார், மேலும் மக்களின் மனதில் நீங்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் இன்றும் என்றும் ரத்தன் டாடா..!!




