டிக்சன் டெக்னாலஜிஸ் நிர்வாகிகள் முதலமைச்சர் விஜயை சந்தித்து ஆலோசனை..!!

 

 

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை இன்று (ஜூலை 27) தலைமைச் செயலகத்தில், டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரித்வி வச்சானி மற்றும் தகவல் தொழில்நுட்ப வன்பொருள், புதிய திட்டங்கள் பிரிவின் தலைவர் ஜோஷ் ஃபோல்ஜர் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர்.

 

இந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் மின்னணு உற்பத்தி, தகவல் தொழில்நுட்ப வன்பொருள் துறை வளர்ச்சி, புதிய முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழில்துறை வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அரசு–தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Read Previous

வங்கி மேலாளரை அறைந்ததாக சர்ச்சை.. மு.க. அழகிரியின் மகள் மீது போலீஸ் நடவடிக்கை..!!

Read Next

ராமேஸ்வரத்தில் ‘இக்னைட் இந்தியா 2026’ நிகழ்வில் பங்கேற்றார் அண்ணாமலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular