தக்காளி ஜாம் செய்வது எப்படி.
தேவையானவை
தக்காளி – கால் கிலோ,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
பச்சை மிளகாய் – 2,
வெல்லம் – ஒரு சிறிய துண்டு,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – சிறிதளவு.
செய்முறை:
தக்காளியை வேகவிட்டு தோல் உரித்து… இஞ்சி, பச்சை மிளகாய், பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு அரைத்ததை சேர்த்துக் கிளறவும்.
இந்த ஜாம் தோசை, சப்பாத்தி, பிரெட்டுக்கு சிறந்த காம்பினேஷன். தக்காளியை கொதிக்கும் தண்ணீரில் போட்டால், எளிதாக தோல் உரிக்க வரும்.




