தண்ணீர் பாட்டிலில் டாய்லட்டை விட 40,000 மடங்கு அதிக பாக்டீரியா..!! நாம் செய்யும் தவறினால் ஏற்படும் பாதிப்பு..!!

மனிதர்கள் ஒரு நாளைக்கு நிறைய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாக காணப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இன்றளவில் பல இடங்களுக்கு நாம் வெளியே சென்று வருகிறோம். இந்த சூழ்நிலையின் காரணமாக பாட்டிலில் தண்ணீர் ஊற்றி உபயோகித்து வருகிறோம். ஆனால் அப்படி உபயோகிக்கும் பாட்டிலை சுத்தப்படுத்தும் பழக்கம் இங்கு நிறைய பேருக்கு கிடையாது.

அதற்கு பதிலாக வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே சுத்தம் செய்கிறார்கள். இந்த நிலையில் ஆய்வில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சுத்தம் செய்யப்படாமல் உபயோகிக்கப்படும் குடிநீர் பாட்டிலில் டாய்லெட்டை விட 40,000 மடங்கு அதிக பாக்டீரியாக்கள் இருக்கும் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதன் காரணம் நமது தண்ணீர் பாட்டிலை சுத்தம் செய்யாமல் இருப்பது தான். மேலும் மருத்துவர்கள் தினமும் சூடான தண்ணீரில் நமது பாட்டில்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். அப்படி செய்யாமல் அந்த பாட்டிலை உபயோகித்தால் பல பிரச்சனைகள் வரக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Read Previous

பொங்கலை சேமியாவில் செய்திருக்கிறீர்களா..!! அசத்தலான செய்முறை இதோ..!!

Read Next

பாஜக இளைஞரணி துணைத் தலைவர் வெட்டிக்கொலை..!! புதுச்சேரியில் பரபரப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular