தென்மேற்கு வங்கக்கடல் முதல் வடக்கு லட்சத்தீவு வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதையின் தாக்கத்தால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மேலும், இந்தப் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
அதேநேரம், தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




