தமிழகம் முழுவதும் போதைப்பொருட்களுக்கு எதிராக காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனையில் 341.5 கிலோ கஞ்சா, ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகள் மற்றும் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் தீவிர சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.




