கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் தங்கள் வேலையை பார்க்க வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார்.
இதற்கு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக துணை நிற்கும் உரிமையும் கடமையும் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் விஜய்க்கு உண்டு என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உலகத் தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டின் முதலமைச்சராக, தமிழர்களின் பிரச்னைகளில் குரல் கொடுப்பது அவரது பொறுப்பு என்றும் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.




