சட்டப்பேரவை விவாதத்தில் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் என்.ஆனந்த், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு இந்தாண்டு ரூ.39,609 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே, 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவது சாத்தியமா என திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், உரிய நிதி இருப்பை உறுதி செய்த பிறகே திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்தார். மேலும், 125 நாட்கள் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 150 நாட்கள் வேலை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.




