தமிழ் பிக்பாஸ் பிரபலத்துக்கு சத்தமில்லாமல் நடந்த திருமணம்..!! பிரபலங்கள் வாழ்த்து..!!

பிக்பாஸ் விக்ரமனுக்கு நடந்த பிரமாண்ட திருமணம்: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் மூலம் பெரிய அளவில் பிரபலமானவர் தான் விக்ரமன். அவர் அந்த ஷோவில் பைனல் வரை சென்று ரன்னர் அப் ஆனார். இருந்தாலும் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்த இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்னர் சீரியலில் கூட நடித்திருக்கிறார்.

ஆனால் அவர் பிக்பாஸ் முடிந்து நிறைய படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் சர்ச்சைகளில் தான் அதிகம் சிக்கி வருகிறார். குறிப்பாக அவர் ஒரு பெண்ணை ஏமாற்றி பண மோசடி செய்ததாக கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த பிரச்சனை அப்படியே முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் பிக்பாஸ் விக்ரமன் குறித்து ஒரு குட் நியூஸ் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் புகழ் நடிகர் விக்ரமனுக்கு தற்போது பிரம்மாண்டமாக  திருமணம் முடிந்துள்ளது.

அவர் திருமணத்திற்கு அவருடன் சேர்ந்து பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்ட,  ரச்சிதா மற்றும் ஷிவின் ஆகியோரும் விக்ரமன் திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். அதனை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Read Previous

காதலனை விஷம் வைத்து கொன்ற காதலி..!! வழக்கில் திடீர் திருப்பம்..!!

Read Next

எந்த நேரத்தில் விளக்கேற்றினால் என்ன பலன்?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular