தல கேப்டனாக மாறினாலும் தலவிதி மாறலையே..!! சென்னை அணிக்கு தொடர் சோகம்..!!

ஐபிஎல் ஆரம்பித்து, சூடு பிடித்து வரும் நிலையில் நேற்று இரவு 7:30 மணியளவில் சென்னை அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் சென்னையில் போட்டி நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா, முதலில் பௌலிங் செய்வதாக முடிவெடுத்தது.

முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணியின் வீரர்கள் 103க்கு 9 விக்கெட்டுகளை விட்டு 20 ஓவரில் தனது பேட்டிங்கை முடித்தது. இதில், துபே 31 ரன்களும் விஜய் ஷன்கர் 29 ரங்களும் எடுத்தனர். அனால் மத்த வீரர்கள் அவர்களுக்கு கய் கொடுக்கவில்லை. பௌலிங்கில் கொல்கத்தா அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதில் வருண் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர், நரைன் 3 விக்கெட்டுகளை எடுத்து சென்னை அணியை பந்தாடினர்.

அடுத்து பேட்டிங் ஆட இறங்கிய கொல்கத்தா அணி இதிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில், நரைன் 44 ரன்களும் டி காக்  23 ரங்களும் எடுத்து அசத்தினர். மற்ற அனைவரும் தனது சம பங்களிப்பை கொடுத்ததால் இலக்கை 10.1 ஓவரிலேயே பூர்த்தி செய்து சென்னை அணியை கொல்கத்தா அணி வென்றது.

Read Previous

கண்கள் கருவளையத்தால் அசிங்கமாக உள்ளதா?.. பாதாம் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்க..!!

Read Next

Central Pollution Control Board (CPCB)- யில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! மாதம் ரூ.1,77,500/- வரை மாத ஊதியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular