கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகர் தேவன், பாஜக மாநிலத் துணைத் தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்து விலகினார்.
இந்த நிலையில், தவெக நிர்வாகிகள் அவரை அணுகி, முதலமைச்சர் விஜய்யை சந்திக்கும்படி அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, செப்டம்பர் 10-ம் தேதி சென்னை வந்து முதலமைச்சர் விஜய்யை நடிகர் தேவன் நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்புக்குப் பிறகே அவரது அரசியல் பயணம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவர் கேரளாவில் தவெகவுக்கு தலைமை பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




