சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு பெண்ணின் வீடியோவில் அமைச்சர் கீர்த்தனா இருப்பதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், ஒரு பெண்ணின் உடை குறித்து விமர்சிப்பது பிற்போக்குத்தனமான அணுகுமுறை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பெண்களைப் பற்றி இழிவான கருத்துகளை தெரிவிப்பவர்களிடமிருந்து இதுபோன்ற செயல்களை எதிர்பார்க்கலாம் என விமர்சித்த அவர், ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாதவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி வதந்திகளை பரப்புவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.




