மதுரை தவேக மாநாட்டு திடலில் குவிந்த தொண்டர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்துள்ளனர். இதையடுத்து, அவர்களுக்கு மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் ட்ரிப்ஸ் மற்றும் ORS கரைசல் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், 3500-க்கும் அதிகமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்ட குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.




