தினமும் காலைல எந்திரிச்சு குழந்தைகளுக்கு என்ன லன்ச் பாக்ஸ் செய்யறதுன்னு தான் பல தாய்மார்கள் யோசிப்பாங்க. எதையோ வச்சாலும் டக்குனு இதுதான் நேத்திக்கு செஞ்சோம். இதனை போன வாரம் செஞ்சோம் அப்படின்னு பல குழப்பங்கள் பிறகு ஏதோ ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியை ரெடி பண்ணுவோம். அந்த வகையில நாளைக்கு நீங்க இந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபியை மறக்காம உங்க வீட்டு குட்டீஸ்க்கு செஞ்சு கொடுங்க.
சுவையான சோயா சாதம் எப்படி பண்றதுன்னு இந்த பதிவில் பார்க்கலாம்.
சோயா சாதம்:
தேவை: பச்சரிசி 2 கப், சோயா உருண்டைகள் அரை கப், பெரிய வெங்காயம் 2, இஞ்சி,பூண்டு விழுது 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் 4 டீஸ்பூன், தயிர் அரை கப், கரம் மசாலாத் தூள் 1 டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், எண்ணெய், நெய் தலா 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
செய்முறை: சோயாவை கொதி நீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்து பிறகு பச்சைத் தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்றாகக் கழுவுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில், சன்னமாக நறுக்குங்கள்.
குக்கரில் நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, சீரகத்தை தாளித்து, வெங்காயத்தை வதக்குங்கள். பிறகு இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பிறகு உப்பு, தயிர், மிளகாய்த் தூள், கரம் மசாலா, சோயா ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வையுங்கள். பிறகு அரிசி மற்றும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வையுங்கள்.
ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.




