நமது உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். அதற்காகத்தான் காலையில் எழுந்தவுடன் கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகின்றோம். அதே வேலையில் நமது உடலை சுத்தமாக வைத்திருப்பதும் மிகவும் அவசியம். அப்படி தனது உடலை சுத்தமாக வைத்திருக்கும் அனைவரும் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். ஆனால் ஒரு சிலர் தினமும் பல் துலப்பதை தவிர்த்து வருகின்றனர். இதனால் எத்தனை பிரச்சனைகள் வரும் என்று உங்களுக்கு தெரியுமா. அதை இந்த பதிவில் காண்போம்.
காலையில் எழுந்தவுடன் பல் துலப்பது மிகவும் அவசியம். ஒருவேளை நீங்கள் பல்துலைப்பதில் அலட்சியம் காட்டினாள் தலை மட்டும் கழுத்து பகுதியில் புற்றுநோய் வருவதற்கும் சைனஸ் கழுத்து மற்றும் தொண்டையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. புற்று நோய்கள் 80% அளவிற்கு மதுபானம் குடிப்பதாலையோ வெற்றிலை சாப்பிடுவதாலையோ அல்லது புகை பிடிப்பதனாலையோ ஏற்படும்.
அதேபோல நமது வாயின் சுத்தத்தை நாம் பார்த்துக் கொள்ளவில்லை என்றால் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வாய்ப்பகுதியில் வீக்கம் ரத்தக்கசிவு அடிக்கடி நடந்தால் மருத்துவர்களை சந்திப்பது மிகவும் நல்லது. ஆகையால் நமது பற்களை தினமும் காலையில் எழுந்தவுடன் துலத்து நமது ஆரோக்கியத்தை காத்துக் கொள்வோம்.



