ஆளுநருக்கு எதிராக நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு..!! கமெண்ட் செய்த கேரள முதலமைச்சர்..!!

நேற்று முதல் தமிழகம் முழுவதும் பரபரப்பாக இருக்கும் ஒரு விஷயம் தான் தமிழக ஆளுநருக்கு எதிராக நீதிமன்றம் கொடுத்து தீர்ப்பு. வெகுகாலமாக தமிழகத்தில் ஆளுநர் இருக்கக்கூடாது என்று பல கட்சிகள் கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். அந்த வகையில் நேற்று ஆளுநருக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கின் இறுதியில் ஆளுநருக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அனைவரும் வரவேற்து வருகின்றனர்.

அந்த வகையில் கேரள மாநில முதலமைச்சராகிய விஜயன் அவர்கள் இதைப் பற்றி அவரது X தளத்தில் கூறியுள்ளார். அதாவது ஆளுநர்கள் சட்டமன்றத்தில் அதிகாரங்களை அபகரிப்பதாகவும் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக கூறியுள்ளார். மேலும் அதிகாரங்களை அபகரிக்கும் ஆளுநர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது மட்டும் இலலாமல், கேரளாவில் இருக்கும் ஆளுநருக்கும் விஜயன் அவர்களுக்கும் பிரச்சனைகள் பல இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கூறியது பலரால் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Read Previous

உங்கள் வீட்டில் மின்விசிறிகளை பயன்படுத்துகிறீர்களா..!! இந்த பதிவை கட்டாயம் பாருங்கள்..!!

Read Next

தினமும் பல் துலக்காவிட்டால் இத்தனை பிரச்சனைகள் ஏற்படுமா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular