நவீன காலகட்டத்தில் பல ஊர்களில் பல பிரச்சனைகள், நம் நினைத்துக் கூட பார்க்காத வகையில் பல திகில் சம்பவங்கள் இன்று வரை நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் திருமணம் ஒன்றில் டிஜே பாட்டுக்காக விருந்தினரின் கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
உத்திர பிரதேச மாநிலம் சுல்தானி போரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், டிஜே பாடல் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது திருமண பெண், தான் மேடைக்கு வரும் பொழுது, தான் விரும்பிய பாடல் ஒன்றை நீங்கள் போட வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு மாப்பிள்ளை விட்டார் தரப்பு தங்களுக்கு பிடித்த பாடலை மட்டும் தான் போட வேண்டும் என்று கூறி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்குப் பிறகு அந்த குடும்பத்தில் உள்ள பெரியோர்கள் இந்த பிரச்சனையை தீர்த்து வைத்து இரு தரப்பினரையும் சமரசம் பண்ணி திருமணம் நன்றாக முடிந்தது. திருமணம் முடிந்து சற்று நேரத்திலேயே இந்தப் பாடல் விவகாரத்தை மனதிலேயே வைத்துக் கொண்டிருந்த மாப்பிள்ளை வீட்டு ஆறில் உள்ள ஒருவர் மிகவும் கோபமடைந்து பெண் தரப்பில் உள்ள நெருங்கிய நண்பரை கத்தியால் குத்தியுள்ளார். மேலும், கத்தியால் கழுத்தை அறுத்துள்ளதால் கழுத்தில் படுகாயம் அடைந்த இந்த நபர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரை விட்டார். இந்த கொடூர சம்பவம் திருமணத்தில் பங்கேற்றவர்களிடமும், அந்த உள்ளூர் மக்களிடையும் பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த குறிப்பிட்ட நபரை கத்தியால் கொன்றவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




