கோவில் பிரசாத சுவையில் தித்திக்கும் சர்க்கரை பொங்கல்.. நாளை சரஸ்வதி பூஜைக்கு மறக்காம இதை ட்ரை பண்ணுங்க..!!

 

பொங்கல் என்றாலே நம் அனைவரின் நினைவுகளிலும் சட்டென வருவது சர்க்கரைப் பொங்கல் தான். வீட்டில் செய்யும் சர்க்கரை பொங்கல் விட கோவிலில் பிரசாதமாக கொடுக்கும் சர்க்கரை பொங்கலின் சுவை அதிகமாக இருக்கும். கோவிலில் பிரசாதமாக கொடுக்கும் சர்க்கரை பொங்கலை நாம் வீட்டிலேயே சுவையான முறையில் தயாரிக்கலாம் அது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சுவையான தித்திக்கும் சர்க்கரை பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:

பச்சரிசி – ஒரு கப்

வெல்லம் – 250 கிராம்

வறுத்த பாசிப்பருப்பு -ரெண்டு டேபிள் ஸ்பூன்

முந்திரி திராட்சை – தேவையான அளவு

நெய் – தேவையான அளவு

உப்பு – ஒரு பிஞ்ச்

ஏலக்காய் பொடி – ஒரு டீஸ்பூன்

பச்சைக் கற்பூரம் – சிறிதளவு

கோவில் கோவில் பிரசாத சுவையில் சர்க்கரை பொங்கல் செய்யும் செய்முறை:

முதலில் அடுப்பை பற்ற வைக்கவும். பின்பு ஒரு குக்கரில் ஒரு கப் பச்சரிசி மற்றும் வறுத்து வைத்த பாசிப்பருப்பு இரண்டு ஸ்பூன் சேர்த்து. நன்றாக கழுவி அதற்கு ஏற்ற வாறு தண்ணீர் ஊற்ற வேண்டும். குறிப்பாக ஒரு கப் பச்சரிசிக்கு மூணு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். குக்கர் மூடி போட்டு மூடி ஒரு நாலு விசில் விட வேண்டும். நன்றாக அரிசி வெந்த பின்னர். அதை நன்றாக மசித்து, வெள்ளத்தை பாகுபதத்தில் காட்சி இதில் சேர்க்க வேண்டும். சாதமும் வெல்லமும் நன்றாக கலந்து வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் முந்திரி திராட்சை வறுத்து இதில் சேர்க்கவும். இதன்பின் பச்சைக் கற்பூரம் சிறிதளவு ஏலக்காய் பொடி தேவையான அளவு உப்பு ஒரு பின் சேர்த்து கலந்தால் நமக்கு கோவில் பிரசாதம் சுவையில் தித்திப்பான சர்க்கரை பொங்கல் தயார். நீங்களும் உங்க வீட்டில் ட்ரை பண்ணிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க..

Read Previous

திருமணத்தில் டிஜே பாட்டுக்காக விருந்தினரின் கழுத்தை அறுத்த மாப்பிள்ளை வீட்டார்..!! அதிர்ச்சி தரும் சம்பவம்..!!

Read Next

அம்மாவுக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் கண்ணீர் சிந்தும் உரையாடல்..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular