வரும் 20-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசு வெடிப்பதால் குழந்தைகளுக்கு கண் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தடுக்கும் வகையில், புதுச்சேரி அரவிந்த் மருத்துவமனை மற்றும் கெரா லிங்க் இன்டா்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து, தாலுகா அலுவலகங்கள் மூலம் 20,000 குழந்தைகளுக்கு பாதுகாப்பு கண் கண்ணாடிகளை இலவசமாக வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.




