துன்பமும் இன்பமே.. என்பதை உணர வைத்த அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Oplus_131072

 

 

துன்பமும் இன்பமே..!!

கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தோமானால்..இன்பம் என்றால் நம் விருப்பபடி, எதிர்பார்த்தவண்ணம், இன்னும் அதைவிட நாம் ஒத்துக்கொள்ளும் விதத்தில் நிகழ்ந்தால் இன்பம் என்கிறோம் அப்படித்தானே!

 

அதேபோல,

 

துன்பம் என்றால் நாம் விரும்பாதபடி, எதிர்பாரதவண்ணம், நாம் ஏற்றுக்கொள்ள முடியாதபடி நிகழ்ந்தால் அதை துன்பம் என்று நினைக்கின்றோம் ..

 

அப்போது,

 

துன்பமும் இன்பமே என்றால் ..

ஒன்றுக்கு ஒன்று எதிர்மறையாக இருக்கும் உணர்வுகளில் எப்படி சமநிலையாய் சிந்திக்க முடியும் ?

 

அதையும் பார்ப்போம் ..

 

துன்பம்,இன்பம் என்ற பட்டியலை எடுத்துக் கொண்டால் அதில் ஏகப்பட்டது இருக்கிறது தானே!

 

அப்போது,

 

இப்போது நாம் நம் துன்பம் என்ற ஒன்றை குறித்து சிந்திக்கிறோம்,

அதன் தாக்கம் நம்முள்ளே வருத்தம், வெறுப்பு, கோவம் போன்ற உணர்வுகளைத் தூண்டி நம்மை அதைக் குறித்தே சிந்திக்க வைக்கிறதுதானே!

 

இப்போது உங்கள் துன்பப் பட்டியலில் எத்தனையோ இருக்க..

அதில்

எதற்கு முக்கியத்தும் கொடுத்து ..

அதை நம் சிந்தையில் எடுத்து..

அதை குறித்தே சிந்தித்து ..

அது நிகழ்ந்த காலத்திற்கு வருங்காலமோ,கடந்தகாலமோ நாம் எண்ணம் போல பயணித்து ..

அந்த காலத்தில் இருந்த மனிதர்களோடு இருந்து ..

 

அந்த நிகழ்வில் பங்குகொண்டு ..

அதை எல்லாம் வரிசைப்படி நினைத்து ..

அதன் தாக்கம் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக தாக்க..

 

நம், அந்த தாக்கத்தின் விளைவாய் எழும் உணர்வுகளுக்கு நம் விருப்பம்போல அனுமதித்து ..

அழுகையோ,இயலாமையோ வெளிப்பட ..நாம் துன்பப் படுகின்றோம் ..

 

அப்போது,

 

மேல் கூறிய அத்தனையையும் கொஞ்சம் கூர்ந்து கவனித்துப் பாருங்கள் ..

 

இவை அனைத்தும் உங்கள் இஷ்டத்துக்கு புறம்பான நிகழ்வு இல்லை தானே!

 

அப்போது,

 

நீங்கள் கஷ்டப்பட தேர்ந்து எடுத்து இஷ்டப்படுவதால் தானே கஷ்டம் !!

கஷ்டம் கஷ்டமாக இருக்க விரும்பும் உங்கள் விருப்பம் நிறைவேறி இருக்கிறது !!

 

அப்போது,

இஷ்டம் போல நிறைவேறியது இன்பம் இல்லையா ??

 

துன்பமும் இன்பம்தானே!

 

நாம்,நம் இஷ்டம் எதுவாக இருக்கின்றது என்பதை முதலில் உணரவேண்டும் ..

பிரித்துப் பாா்த்தால் எல்லாமும் ஒன்றே!

 

Read Previous

படித்ததில் கண்ணீர் வரவைத்த பதிவு..!! அம்மாவைப் பற்றி..!!

Read Next

உங்கள் வாழ்க்கை துணையின் உரிமைக்கும் ஒரு எல்லை இருக்கு தெரியுமா?.. படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular